ஒருவன்....
ஆற்றல் படைத்தும் ,வாழ வகை தெரியாமல் வாழ்விழந்த மனிதர்களில் நானும்
ஒருவன்
ஒருவன்
ஆதாயத்திற்காக மானத்தை இழந்து மண்டி இடும் மானிடரை கண்டு மனம் கசியும்
ஒருவன்
ஆற்றல் படைத்தும், அங்கீகாரமற்ற அனாதை போல் ஆதரவற்று நிலை தடுமாறும்
ஒருவன்
செல்வத்தை ஈட்ட கல்வியை சில்லறை பொருளாகிய செல்வந்தரை சுட்டெரிக்க இயலா
ஒருவன்
சிபாரிசு என்ற பெயரில் வேசியை கூட கற்பழிக்கும் ஈன புத்தியாரை கண்டு மனம் குமுறும்
ஒருவன்
பிச்சைகாரனின் தட்டில் விழுந்த செல்லாகாசு போல சமுகத்தில் செல்லாமல் போன
ஒருவன்
ஒருவன் இவ் வொருவன் யாரிடம் சினம் கொள்ள .......
சொல்லடி பராசக்தி ,எனை சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய் ?
கு.அமல் மோகன்
ஒருவன்
கல்வி கற்று தந்த சித்தாந்தம் பேசி கொண்டு ,நடைமுறை வாழ்கையின் வேதாந்தம் புரியாமல் போன
ஒருவன்
சீர்திருந்தாத இச்சமுதாயத்தை கண்டு சினத்தின் உச்சத்திற்கு தள்ளப்பட்டஒருவன்
ஆதாயத்திற்காக மானத்தை இழந்து மண்டி இடும் மானிடரை கண்டு மனம் கசியும்
ஒருவன்
ஆற்றல் படைத்தும், அங்கீகாரமற்ற அனாதை போல் ஆதரவற்று நிலை தடுமாறும்
ஒருவன்
செல்வத்தை ஈட்ட கல்வியை சில்லறை பொருளாகிய செல்வந்தரை சுட்டெரிக்க இயலா
ஒருவன்
சிபாரிசு என்ற பெயரில் வேசியை கூட கற்பழிக்கும் ஈன புத்தியாரை கண்டு மனம் குமுறும்
ஒருவன்
பிச்சைகாரனின் தட்டில் விழுந்த செல்லாகாசு போல சமுகத்தில் செல்லாமல் போன
ஒருவன்
ஒருவன் இவ் வொருவன் யாரிடம் சினம் கொள்ள .......
சொல்லடி பராசக்தி ,எனை சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய் ?
கு.அமல் மோகன்
ஒருவன் இவ் வொருவன் யாரிடம் சினம் கொள்ள .......
ReplyDeleteசொல்லடி பராசக்தி ,எனை சுடர்மிகு அறிவுடன் ஏன் படைத்தாய் ?
Sema :)