சிதைக்கும் முன் சிந்தியுங்கள்!


90 நாட்கள் இருட்டறை வாசம் தந்தாய்!
தொட்டணைக்கும் நாள் எது எனும் ஏக்கம் தந்தாய்!
தொங்கும் தடாகத்தில் உல்லாசம் தந்தாய்!
அங்கம் வளராமலேயே நீச்சல் தந்தாய்!
கவிதையாய் ஒளிக்க உன் இதய துடிப்பை தந்தாய்!
கனவுகள் அற்ற உறக்கமும் தந்தாய்!
உன் சுவாசத்தை உயிர் மூச்சை தந்தாய்!
உண்டதை எல்லா ஊணாய் தந்தாய்!
தந்தாய் ,தந்தாய் . எனக்கு எல்லாம் தந்தாய் என் தாய் !

இன்று என்ன நினைத்தாய் ?
என்னை ஏன் துறந்தாய்?
கருவறையில் கந்தகந்தலாய் சிதைத்தாய்!
நான் வலி அறியேன் என்று நினைத்தாய்!
எனக்கும் உணர்வுள்ளது என்று மறந்தாய்!

வேண்டாம் அம்மா இனி இச்செயல்,
என் தம்பியோ தங்கையோ தாங்கமாட்டார்கள் இவ் வலி!

"சிதைக்கும் முன் சிந்தியுங்கள்"

By: Amal Mohan

Comments