வாசனை மறந்த மலர்கள்

             மாதம் துடங்கியதும் .....Housing loan , car loan, credit card bills, post paid bill , provisions , children school term fees and miscellaneous என்று budget போட்டு தன்னையே மறந்து எப்போதும் வேற்று கிரக வாசி போல் அலையும் பலருக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்....

           இந்த டைட்டில் யோசிக்கும் போது  என் நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி "what an absurd title" எப்படி மலர்கள் வாசனையை மறக்கும்? உண்மை தான் வெறும் attractive வா  title வைச்சுட்டு உள்ள மேட்டரே  இல்லாமல் சீன் போடறது fashion ஆகி போய் விட்டது...

நான் வாசனை மறந்த மலர்கள் என்று உருவக படுத்தியவர்கள் நம்மில் ஒருவர் என்னை போல் உங்களை போல் ஒரு சராசரி லௌகீக வாழ்கை வாழும் மனிதன்....

              நம்மில் எத்தனை  பேர் பள்ளி கூடத்தில்  ஆற்றல் பெற்றவர்களாக இருந்தோம் , நாம் எழுதிய தமிழ் கட்டுரை எத்தனை  பேரிடம் கை தட்டு வாங்கி இருக்கும், பேச்சு போட்டியில் கலந்து எத்தனை  பேரை அசரவைத்து இருப்போம், நம் கால்கள் நடனத்தால்  எத்தனை மேடையை அதிர வைத்து இருக்கும், நம் ஓவியத்தை ரசிக்க அதன் மேல் காதல் கொள்ள எத்தனை  பேர் இருந்திருப்பார்கள் நம் ஆக்கத்திறனை  பார்த்து எத்தனை  பேர் பொறாமை கொண்டிருப்பார்கள் ?
              அத்தகைய ஆக்கத்திறன் பெற்று இருந்தவர்கள் அத்தனை  பேரும்  இன்று எழுத்தாளராகவும் , நடன கலைஞராகவும், மேடை பேச்சாளராகவுமா இன்று இருகிறார்கள் ?
              எது நம் ஆக்கத்திறனை சாகடித்தது, காலத்தின் சுழட்சியில்  நம் ஆக்கத்திறன் காணாமல் போனதோ ? நம் புத்தாக்கம் செத்து போனதோ ? இல்லை நாமே கொலை செய்தோமா ? நம் கற்பனை குதிரை கால்கள் உடைந்து முடங்கி முடமாய் போனதற்கு யார் காரணம் ?
சில காரணங்களை அலசும் போது முதல் வரிசையில் நின்று கை தூக்கி காட்டிய காரணம் மணவாழ்க்கை ......
             ஒரு சமயம் என் சேவையுறுநர் ஒருவரை evaluate  செய்துகொண்டிருந்தேன் ...எப்போதும் கேட்கும் சராசரி கேள்விகள் , வியப்பு என்னவென்றால் fitness studio விற்கு வரும் 80 விழுக்காடு நுகர்வோருக்கு மன அழுத்தம்(stress ) அதிகமாக காண படுகிறது.மன அழுத்தத்திற்கு காரணம் பலவாக இருக்கிறது . நான் evaluate செய்த பெண்மணியின் மன அழுத்தத்திற்கு காரணம் தன் கணவன்,'வேடிக்கை என்னனா அந்த அம்மாவோட வீட்டுகாரர் sundays ல கிரிகெட் விளையாட போயுடுவாராம் ....40 வயசுல கிரிக்கெட் விளையாடி Sachin tendulkar  ராகவா ஆகா போறாரு ? He does not have maturity and responsibility. என்று ஆவேசமாக சொன்னாங்க ......கல்யாணத்திற்கு அப்புறம் கிரிகெட் ஆடறது குத்தமா ?
இப்போ புரியும் "சிந்து பைரவி "படத்துல சிந்து கதாபாத்திரம் ஏன் மேலோங்கி நிற்கிறாள் என்று...
                School ல தொடங்கி College ல  தொடர்ந்து வந்த தனித்திறமை திருமணத்திற்கு  அப்பால் ஏன் காணாமல் போனது....இதற்கு   மணவாழ்க்கை மட்டும் தான் காரணமா ? இல்லை தனிப்பட்டு ஒவ்வொருவரின்  மாற்றமா ?
              தனிப்பட்ட மாற்றமோ இல்லையோ மன வாழ்கை ஒருவரின் தனித்திறமையை வெகுவாகவே மாற்றிவிடுகிறது .பெரும்பாலான சமயங்களில் தன் மனைவியோ கணவனோ தன்  துணையின் தனித்திறமையை அங்கிகாரம் செய்வதில்லை அதை ஊக்குவிப்பதும் இல்லை.
                சில நாட்களுக்கு முன் வலை தடத்தில் (Facebook,Blog ) என் paintings and photographs பார்த்துவிட்டு ஒருவர் என் நண்பரிடம் என்னை பற்றி விசாரித்தாராம்.எல்லா routine கேள்விகளுடன் எத்தன குழந்தைகள் அவருக்கு. wife என்ன பண்ணறாங்க ? என்று கேட்டாராம் when my friend said that i was separated , என்னை விசாரித்தவர் சொன்னாராம் unique அக இருந்தா  personal  life நன்றாக அமையாது என்று... அது எவ்வளோ தூரம் உண்மை என்று தெரியாது. Personal life  நல்லா இல்லன்னுறதால  தனித்திறமையை மறக்காம இருக்கிறோமா?,இல்லை creative அ இருந்தா  personal life  நல்ல இருக்காதா ? இந்த  correlation ன புரிஞ்சிக்க முடியல.. மண  வாழ்கை தான் காரணம் என்று ஒரு Hasty generalization செய்ய முடியாது.but it definitely has an influence..
             எனக்கு நடந்த நிகழ்வுகை அசை போட நினைகிறேன் , என் குறுகிய கால மண  வாழ்வில் என்னால் paintings நெறைய பண்ண முடியல,my painting brushes were broken at times,my works were criticized meaning less, கோழி கிறுக்கல் என்று என் calligraphy skills வர்ணிக்க பட்டன ,எழுத்தும்  கவிதையும் சந்தேக பொருளாய் மாறியது...இப்படி தான் எல்லாருக்கும் நடக்கும்னு சொல்லல இப்படியும் நடக்கலாம்..என்ன பண்ண இந்த population whole ல negative sample ஆகிடோமே .
               மாற்றங்களுக்கு மண  வாழ்க்கையும், துணையையும்  காரணம் காட்டினாலும் ஒவ் வொருவரும் தனக்கு புடிச்ச விஷயத்தை செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் அதை life partners புரிந்து கொள்ள வேண்டும...life partner சை விட  வேறு யார் நல்லா புரிஞ்சிக்க முடியும்.25 வருஷமா கூட இருந்த talents ச  குடும்ப வாழ்கை என்ற பேர்ல கூறு போடா கூடாது ...
               மீண்டும் ஒருமுறை உங்களுக்கு புடிச்ச விஷயத்தை பண்ணி   பாருங்களேன், அது உங்க guitarராக இருக்கட்டும், வீணையாக இருக்கட்டும் , பேனாவாக இருக்கட்டும் இல்லை உங்கள் camera வாகட்டும் மீண்டும் ஒருமுறை தூசி தட்டி மறந்து போன உங்கள்  தனி திறனை  செய்து பாருங்களேன் ....அதில் வரும் orgasmic feel வேரு  எதிலும் கிடைக்காது
              அதை அவன் படைத்தான், அது  அவள் பாடிய பாடல் , இது இவர்கள் படைப்பு  என்பன மத்தியில் அவன் பெரிய ஆள் சந்தோசமா புள்ள குட்டி பெத்துகிட்டு சாகும் வரை போராடி மாய்ந்து போனான் என்பவர்கள்  வரலாற்றில்  இடம்  பிடிபதில்லை .
           ஒவ்வொரு  படைப்பாளியும் தன்  படைப்பை இங்கு பதிவு செய்ய வேண்டும் , இங்கு விட்டு செல்லும் படைப்பு, நாம் வாழ்ந்த வாழ்வை ,நாகரீகத்தை , நம் பண்புகளை பின் வரும் தலைமுறை  கொண்டாடவேண்டும்....
 "நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ , சொல்லடி  சிசக்தி எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்... "  என்ற பாரதி கவிதை நினைவுக்கு வருகிறது இந்த வாசனை மறந்த மலர்களை கண்டால் .......

கு.அமல் மோகன் 




Comments

  1. ஒருத்தனுக்கு தன்னுடைய தனித்திறமையில் ஈடுபாடு குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். It can be due to familial influence, social, economical or due to peers. When we have less stress during childhood, all those extra curricular activities gave us enough dopamine, but not when we mature or grow into adulthoood. Lack of recognition, lack of time, lack of money, etc., will lead to lack of enjoyment in the same activity which will eventually lead to the death and dearth of talents. However, there are exceptional people who survive all the pressures and remain the epitome of elegance.

    ReplyDelete

Post a Comment

Popular Posts