அண்டம் வளர்தாள் .....
காமகளிஆட்டதில் கழித்த விந்தை தன்னுள் அடைகாத்து ,
மூப்பெய்திய நாள் முதல் மாதம் ஒரு முறை உடலை வருத்திய தூரம் தூரமாய் போக ,
கார் இருளுக்குள் வளர்பிறையை வளர்த்து ,
பிறை வளர்ந்த மூன்றாம் வாரத்தில் இதயம் துடித்ததும் இனம் புரியா இன்பம் கொண்டு ,
தான் உண்டதை கொடி கோத்து தொப்புள் வழியே தந்து ,
பூ பாதம் உதைத்த உதையெல்லாம் பூரிப்புடனே தாங்கி ,
வேண்டாத வரமெல்லாம் வேண்டி மௌனமாய் ஈரேழு திங்கள் வலியுடன் தவமிருந்து ,
பனிக்குடம் பிளந்து , தன் பெண்மை கிழித்து ,
வெளியே வந்து விழுந்ததும் என் அழுகை பார்த்து "ஒரே ஒரு முறை சிரித்தாள்"
இன்று அவள் கண்ட கனவுகள் நிறைவேற ஐஸ்வர்யம் வந்து சேர .......
தன் ஒரே மகன் தன் நரை மகுடம் பூண்ட தாய்க்கு தந்த வரம்....,
முதியோர் இல்லத்தில் சொகுசு சிறை வாசம் !
கடல்கடந்து போய் ,புகழை ஈட்டி , பணத்தை ஈட்டி ,
ஈன்றவளுக்கு ஈம சடங்கு கூட செய்ய நேரம் இல்லாமல் போன மகனின் உபயம் .................
"Facebook இல் ஒரு status update ".........
.......... கு.அமல்மோகன்
Daa plz translate !
ReplyDeleteAwesome
ReplyDelete