காதல்......




என்னை விடவும் காதலை நேசித்தவன் எவனும் இல்லை என்ற கனத்த நம்பிக்கை கொண்டவர்கள் இங்கு பலர் உண்டு , அவர்கள் அத்தனை  பேரும் காதலில் வெற்றி கொண்டவர்களா என்ற கேள்வி எழும்போது ஒருமித்த பதில் இல்லை !
எத்தனை பேர் எத்தனை பேர் இக்காதலுக்கு மாண்டார்கள் இன்னமமும் ஓயவில்லை இக்காதல்.

" ஒரு மூத்த குடியாளர் இல்லத்தில் பார்த்த வேடிக்கையான நிகழ்வு- அவருக்கு வயது எண்பத்திஎட்டு .... அந்த அரைகால் சட்டை , deo, well groomed hair, brisk walk ,ரசிக்க வைக்க குடியவைகள் . காலையில் எழுந்தவுடன் அவரின் முதல் காரியம் தமிழ் அனா  ஆவன்ன bookகை வச்சுக்கிட்டு தமிழ் உச்சரிப்பது தான் .well he is an  Anglo Indian a compelled bachelor , I  liked his dedication ,the way he reads tamil ,the way he carries him self  being octogenarian ,the way he tries to impress the retired pretty old தமிழ் teacher,

முதுமையை கூட விட்டு விட வில்லை இந்த காதல் ,
இக்காதலை நேசிப்பதா இல்லை சாடுவதா என்று தெரிய வில்லை..
வெறும் திருமண அங்கிகாரம் பெற்று சமுக ஒப்புதல்லுடன் இனசேர்கையில் முடியும் காதல்,காதலின் வெற்றி அன்று .....
சேராமல் போனாலும் மரணபடுகையில்லும் நினைவுக்கு வருவாளே அவள் மேல் கொண்டதே உண்மை காதல்......

வெகு காலம் முன் ஒரு முதுமை தம்பதியை WORLI sea phase இல் பார்த்து ரசித்தேன் எத்தனை ஆனந்தமாய் கை கோர்த்து நடந்தார்கள் இன்னும் இளமையாக இருக்கிறது அந்த நினைவுகள்...
என்னை போன்ற கலை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு காதலின்மேல் ஒரு அலாதி பிரியம் உண்டு .....
காதலையும் காமத்தையும் பகுத்து பார்க்கும் பக்குவம் பெற்ற அறிவுடையவர்கள்.
எத்தனை அறிவு இருந்தும் காதல் என்பது எவனோ வரைந்த ஒரு Abstract பைண்டிங் மாதிரி .
முழுசா புரிந்த மாதிரி இருக்கும் அனால் ஒன்றுமே விளங்காது.....
ஒவொரு முறையும் வலி தந்தாலும் மீண்டும் நேசிக்க தூண்டும்
நாங்கள் காதலியை நேசித்ததை விடவும் காதலை அதிகமாக நேசிக்கிறோம் .....
காதல் தந்த கற்பனையை நேசிக்கிறோம் , அது கற்று தந்த பாடங்களை நேசிக்கிறோம், அது தந்த இனிமையான நேரங்களை நேசிக்கிறோம் ........

கு .அமல்மோகன் 

Comments

Post a Comment

Popular Posts