இறைவனை பற்றிய ஒரு மாற்று சிந்தனை.....

                தேடுகிறேன் காலம் முழுக்க....எங்கே இருக்கிறான் அவன்.......இன்னலை  தகர்த்து இன்பம் தரும் இறைவன் எங்கே இருக்கிறான் ,என்ன உருவில் இருக்கிறான்....கீதையில் இருக்கிறானா? ,விவிலியத்தில் இருக்கிறானா ?,திரு குரானில் இருக்கிறானா? தேடுகிறேன்...,,தேடல் முடியவில்லை......
                இங்கு சராசரி மனிதன் பின்பற்றும் மதம் வெறும் அடையாளமா ?
இல்லை அதையும் மீறிய நம்பிக்கையா?
எதை சார்ந்தது மதம்....??
எதை தேடுகிறோம் மதத்தில்?
நிம்மதியையா?!.....அப்படியானால் அந்த நம்பிக்கையும் ஒரு சுயநலமே....
              இங்கு மதம் மாறும் வேடிக்கை கூட்டம் ஒன்று உண்டு .... தன் மதத்தின்  கூறுகளை தெரியாமலேயே வேற்று மதம் மாறும் கூட்டம....
மதம் சார்ந்த கேள்வி கேட்டால் மழுப்புகிறார்கள் ,
இல்லை சாடுகிறார்கள்,நாத்தீகன் என்றால் ஏற இறங்க பார்கிறார்கள்....
              கல்வியில் சிறந்தவன் நாத்தீகம் பேசினால் பகுத்தறிவாளன் என்கிறார்கள் ,கல்லாதவன் பேசினால் மூடன் என்கிறார்கள், மூடன் ஒரு முதுகெலும்பற்ற கூட்டத்தை தன்வசீகர வார்த்தைகளினால் கவர்தால் சாமியார்ஆகி விடுகிறார்கள்,
             இந்த சமுகத்திற்காக எதாவது  ஒரு மதத்தின் போர்வை தேவைபடுகிறது...
              நாத்தீகர்களை கண்டால் கொஞ்சம் தள்ளியே இர்ருபார்கள் ,தன்னையும் நாத்தீகன் ஆக்கி விடுவனோ என்ற பயத்தில்.....
             எங்கிருந்து வந்தது இம்மதம்... Richard dawkins சொன்ன மாதிரி வழி வழியாக வந்த ஒரு 'celestial tea cup'...
Any religion is a way of living அதை எத்தனை  பேர் உணருகிறார்கள்
மதத்தின் பேரால் மரணங்களும் , மதத்தின் பேரால் தீவிரவாதமுமே  இங்கு பெருகி உள்ளது ......
           சிலருக்கு இங்கு மதம் ஒரு வியாபாரம் diamond studded blazer போடர அளவுக்கு உயர்த்தி விடும் வியாபாரம் ,மதத்தை promote  பண்ண பணம் பறிக்கும் பக்குவம் பெற்றவர்கள்.
"Enlightment" இது ஒரு வேடிக்கையான விஷயம் ,இது தான் enlightment  என்று யார் இவர்களிடம் சொன்னது....தான் englighted  என்று business பண்ற business குரு பலர் இருகிறார்கள்...
என்னை கேட்டல் JESUS  கூட ஒரு நல்ல Team  leader , he was a very great teacher than god,was a very good manager, he shared his thoughts and teachings only for three years ...people still follow it.....அதுலயும் எல்லா வற்றையும் follow பண்றதில்லை, தன்
comfort zone பாதிக்காத போதனைகளை மட்டுமே பின்பற்றுவார்கள்....தனக்கு வேணும் என்றதை மட்டும் பின்பற்ற எதற்கு ஒரு முழு மதத்தின்  அரிதாரம் பூசி கொள்கிறார்கள்....யார் இங்கு மூடர்கள் நாத்தீகர்களா(ATHEIST )  ,ஆத்தீகர்களா (THEIST )........ஆங்கிலத்தில்  இன்னொரு வகை உண்டு AGONIST ...கேள்வி கேட்பவர்கள்.....ஏன் ஒரு மதத்தை அலசி ஆராய கூடாது... ஏன் "swoon theory " உண்மையாக இருக்க  கூடாதா.......Why shouldn't we accept that Jesus lived in India? why cannot we accept the fact  that Jesus tomb was excavated...இங்கு கிறிஸ்துவ மதம் மட்டும் இல்லை எல்லா மதங்களும் கேள்விக்கு உரியவைகளே....
            ஏன் பள்ளி கூடங்களில் மதத்தை Admission form ல கேட்டு மதத்தை புகுத்துகிறார்கள்,,,,ஏன் இது இந்து குழந்தை ,கிறிஸ்துவ குழந்தை ,பெளத்த குழந்தை என்று வகை படுத்துகிறார்கள்.....
கடவுளை நம்புவது ஒவ்வொரு மனிதனின் விருப்பு....அது வேணாம்ன்னு சொல்லல, பைத்தியகாராதனமாக மதங்களை  நம்புகிறவன் , நம்பாதவன்  மேல் திணிக்காதீர்கள்......
                    நம்பிக்கை தான் கடவுள் என்றால் ,அந்த நம்பிக்கை முதலில் தன்  மேல் இறுக்க வேண்டும் ,தன் முயற்சிகளின் மேலும் தன்  உழைப்பின் மேலும் இறுக்க வேண்டும்......மற்றதை இறைவன் இருந்தால் பார்த்துகொள்வான்......
        நானும் இறை நம்பிக்கை உடையவன் , நான் தேடும் இறைவனை Phi ratio வில் பார்கிறேன் , DNA வின் த Double helix சில் பார்த்து வியக்கிறேன் , BRAIN FUNCTIONS ,Dismorphism  பார்த்து மலைத்து போகிறேன் .....விடியற் காலை தென்றலில் ஸ்பரிசிக்கிறேன் .
இதில் எல்லாம் அவனை உணர்கிறேன் .......மதங்களின் மூலமோ.....போதனைகளின் மூலமோ ஏற்றுகொள்ள மறுக்கும் நாத்தீகன்....நான்
           நீயும் நானும் தான் கடவுள்.... உன்னுள் இருக்கும் சிவனையும் ,கிறிஸ்துவையும் ,புத்தனையும் தேடு .....probably  அந்த தெளிவின் உணர்வே Enlightment ....கடவுள் ....

கு.அமல் மோகன்















Comments

Post a Comment

Popular Posts